வெகு ஜன உளவியல்

நான் பல ஆண்டுகளுக்கு முன் வெகு ஜன உளவியல் (Mass Psychology) பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதில் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியை ஆசிரியர் விவரித்திருந்தார். அந் நிகழ்ச்சி ஹிட்லரின் மறைவுக்குப் பின் அவரது உதவியாளர் ஒருவரால் எழுதப்பட்டது.
1933-ம் ஆண்டில் ஹிட்லர் ஜெர்மனியின் ஒரு நகரத்தில் மாலை 7 மணிக்குச் சொற்பொழிவாற்ற வேண்டியிருந்தது. ஹிட்லர் மாலை 4 மணிக்கே அந் நகரை அடைந்துவிட்டார். அவர் ஒரு கட்சித் தொண்டரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டார். ஹிட்லரின் ஆணைப்படி அது ரகசியமாக வைக்கப்பட்டது. கூட்டம் நடை பெற வேண்டிய இடத்துக்கு மாலை 7 மணிக்கு முன்பே தன் உதவியாளரை அனுப்பி வைத்தார். கூட்டம் அதிகம் சேர்ந்ததும் அவருக்குத் தகவல் அனுப்ப வேண்டுமென்பது ஏற்பாடு. உரிய நேரத்தில் கூட்டம் சேர்ந்தது. அவரது இன்னொரு உதவியாளர் “அன்பான ஜெர்மன் மக்களே, ஹிட்லர் இங்கே வருவதற்காக வெகு தூரத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். சாலையில் பனிப் புயலும் மழையும் இருப்பதால் அவரது பயணம் தடைப்படுகிறது. ஆனாலும் கண்டிப்பாகச் சற்றுக் காலதாமதமாகவேனும் இங்கே வந்து சேர்வார்”, என்று புழுகிக் கொண்டிருந்தார். அவருக்கும் ஹிட்லர் எங்கே உள்ளார் என்பது தெரியும். சுமார் ஒன்பது மணியளவில் ஹிட்லர் கலைந்த தலையுடனும் மிகவும் தளர்ந்த தோற்றத்துடனும் வந்து சேர்ந்தார். கூட்டம் உடனே ஆரவாரித்தது, “ஹையில் ஹிட்லர்” (ஹிட்லர் வாழ்க). உதவியாளரின் அருகிலிருந்த ஒரு கிழவர், “பார்த்தீர்களா, எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாது கூட்டத்திற்கு வந்துவிட்டாரே ! இவரை நம்பி நமது நாட்சியின் அரசை ஒப்படைக்கலாம்”, என்று கூறி மகிழ்ந்தாராம். இப்படி உள்ள முட்டாள்கள் இருக்கும் வரை தலைவருக்குக் கவலையே இல்லை என்று நினைத்துக் கொண்டாராம் உதவியாளர்.
ஹிட்லரின் சொற்பொழிவுகள் பாண்டு வாத்தியங்கள், தவிட்டு நிறச் சீருடை அணிந்த தொண்டர்கள் (Brown shirts) இல்லாமல் நடக்காது. இனப் பெருமை(ஆம் – ஜெர்மானியர்கள் சுத்தமான ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நாசிகளின் கோட்பாடு. அதனால்தான் அவர்களுடைய அடையாளச் சின்னம் கூட ஸ்வஸ்திகா) பற்றிய தம்பட்டமும் நிறையவே இருக்கும். (German soldiers are the protectors of European civilization)
இதே தந்திரங்களைத்தான் நமது அரசியலாரும் பின்பற்றி வருகின்றனர். ஹிட்லரும் சரி, நமது அரசியல்வாதிகளும் சரி, நமது சாமியார்களும் சரி, யாரும் எந்தப் பல்கலைக் கழகத்திலும் Mass psychology படித்த தில்லை.HitlerSwami Premananda.jpg

Advertisements