முற்றத்து முல்லை

சாமுவல் லாங்ஹார்ன் கிளமெண்ட்ஸ். இந்தப் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  இல்லையா? மார்க் ட்வெயின்? ஓ, தெரியும். டாம் சாயர் கதை எழுதியவர்தானே? ஆம். அமெரிக்காவின் நகைச் சுவை எழுத்தாளர். அவர் ஒருமுறை தன் வீட்டில் நடைபெறும் விருந்தின்போது விலை குறைந்த சுருட்டுக்களை வாங்கி அவற்றின் மேல் விலை உயர்ந்த சுருட்டுக்களின் லேபில்களை ஒட்டி விருந்தினருக்கு வழங்கினார். விருந்தினர் ‘ஆஹா, ஊஹூ’ என்று பாராட்டியதோடு மார்க் ட்வெயினை மிகவும் புகழ்ந்தனர். We go by the label and not by the quality. நம் நாட்டில் படைக்கப்பட்ட சிற்பங்களின் மகிமையை வெளி நாட்டினர் பாராட்டிய பின்தான் நாம் அறிந்து கொண்டோம். இதற்கேற்ப நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன்.

கன்னியாகுமரியில் சுடலையாண்டிக் கம்பர் என்று ஒரு நாதஸ்வர வித்வான் பகவதி அம்மன் கோவில் வித்வானகப் பணியாற்றினார். உள்ளூர் திருமண வீடுகளில் கூப்பிடுவார்கள். நன்றாகத்தான் நாதஸ்வரம் வாசிப்பார். என்றாலும் அவருக்குப் புகழும் வருமானமும் வந்து சேரவில்லை.

இந் நிலையில் ஒரு நாள் கன்னியாகுமரி மாதா கோவிலில் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையைக் கச்சேரிக்கு அழைத்திருந்தார்கள். அவருக்கு ரூ2000 சன்மானம் பேசப் பட்டிருந்தது. உண்மையில் அத் தொகை அவரது வழக்கமான தொகையை விடக் குறைவுதான். எனினும் மாதா கோவிலில் கச்சேரிக்கு அழைத்தது அவருக்குச் சற்று வியப்பை அளித்ததோ என்னவோ. குறைந்த சன்மானத்தை ஏற்றுக் கொண்டு கச்சேரி செய்தார். இது 1947 வாக்கில்  நடை பெற்ற நிகழ்ச்சி. அப்போது ரூ2000 ஒரு பெரிய தொகை. கச்சேரியைக் கேட்கக் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள (அப்போது அது மாவட்டம் இல்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி) இசைப் பிரியர்கள் அனைவரும் கூடிவிட்டனர். ராஜரத்தினம்பிள்ளையின் கச்சேரி நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கச்சேரியைக் கேட்ட அனைவரும் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டனர். அதுதான் உள்ளூர் வித்வான் சுடைலையாண்டிக் கம்பர் கச்சேரியும் ஏறத்தாழ ராஜரத்தினம்பிள்ளையின் கச்சேரியை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு இருந்தது என்பதுதான். அப்புறம் என்ன? சுடலையாண்டிக் கம்பருக்கும் கச்சேரி அச்சாரம் தூள் பறந்தது.

TN Rajaratnam pillaiKanyakumari church.JPGPlaceholder Image

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s