ஒரு ஆரூடம்

பிஹாரில் சில மாதங்களுக்கு முன் நடை பெற்ற தேர்தலுக்கு முன்பு ஒரு சோதிடர் நிதிஷ்குமாருக்கான வெற்றி வாய்ப்புப் பற்றிக் கோள்கள் என்ன சொல்கின்றன என்று கணித்து வெளியிட்ட குறிப்பு. அப்படியே தருகிறேன்.தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
ராகுவும் வியாழனும் சேர்ந்திருப்பதால் சற்று சிரமமான பிரச்னைகள் தோன்றும். அதனால் இவர் மிகப் பெரும் சவால்களைச் சந்திக்க நேரிடும். அவருடைய வாழ்க்கையிலேயே இது மிக சிரமமான தேர்தல். அவருடைய கட்சித் தொண்டர்களோடும், கூட்டணித் தலைவர்களோடும் பிரச்னை ஏற்படும். அதனால் அவர் விரும்பும் வெற்றி கிட்டாமல் போகலாம். ஆனால் வியாழன் அவருக்குச் சாதகமாகச் செயல்படுகிறது. அதனால் கூட்டணியில் அவரது கட்சியே அனைவராலும் விரும்பப்படும். ஆனால் சந்திரனின் போக்கால் அவருக்கு அடுத்த கட்டத் தேர்தலில் சாதகம் ஏற்படலாம். என்றாலும் அவருக்கு நல்ல காலம் என்று சொல்லிவிட முடியாது.
தேர்தலுக்குப் பின் நடந்தது என்ன? நிதிஷ்குமார் – லாலு பிரசாத் யாதவ் – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ் குமாரின் கட்சியை விட லாலு பிரசாத் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் நிதிஷ்குமாரே அமைச்சரவை அமைக்க லாலு பிரசாத் யாதவ் முழு மனதுடன் ஒப்புதல் அளித்தார். ஆனால் உங்களால் ஜோசியர் சொன்னது முழுவதும் தவறு என்று சொல்ல முடியுமா?
இந்தத் தேர்தல் முடிவு வந்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நாமும் ஜோஸியம் பார்த்தாலென்ன? சொற்களை மிகவும் முன் யோசனையுடனும் தப்புவதற்கான ஆயிரம் பாதைகளையும் வழி வகுக்கும் வகையிலும் கையாள வேண்டும். அதற்கு மட்டும்தான் பயிற்சி தேவை. அது போக ராகு, கேது, வியாழன் என்றெல்லாம் சில உபரி விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நான் அதற்கான பாடங்களைக் கற்று வருகிறேன். ஒரு நல்ல நாளில் எனது தொழிலைத் தொடங்க எண்ணியுள்ளேன். ஆதரவு தருவீர்களா? தருவீர்களா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s