வேதாளம் சொன்ன கதை

“விக்ரமா, நான் சொன்ன முதல் கதைக்கு நீ இன்னும் பதில் சொல்லவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய். விடை தெரிந்திருந்தும் நீ சொல்லாமலிருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்பதை நீ அறிவாய்”.

“வேதாளம், உன் கதையில் வரும் காவலர், பத்திரப் பதிவாளர் செய்கைகள் வழக்கமாக நடை பெறுவதே. ஆனால் தேவ சபையின் குரு செய்ததே இழிவான செயல்” என்று கூறித் தன் மௌனத்தைக் கலைத்ததும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி வேதாளத்தைப் பிணைத்திருந்த கயிற்றை அறுத்து வேதாளைத்தச் சுமந்து வந்தான்.

“விக்கிரமா, என் அடுத்த கதையைக் கேள்: வந்தனாபுரி என்ற ஊரில் வேதவல்லி என்ற பெண் வசித்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தாய் ஊரான  பரமபுரிக்குச் செல்வதற்காகப் பேருந்து ஏறினாள். அப் பேருந்து ரத்னபுரி வரை மட்டுமே செல்லும். அதன் பிறகு வேறு ஒரு பேருந்தைப் பிடித்துப் பரமபுரி செல்ல வேண்டும். ஆனால் வழியில் ஒரு மாணவன் நடத்துநரிடம் தகராறு செய்தான். ஓட்டுநர் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மாணவன் அதைக் கேட்காமல் மீண்டும் தகராறு செய்தான். ஓட்டுநர் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினார். அடுத்ததாக வந்த பேருந்தின் ஓட்டுநரும் வண்டியை விட்டு இறங்கி என்ன தகராறு என்று விசாரித்தர். இப்படியாக அடுத்தடுத்து வண்டிகள் நின்றுவிடவே இந்தப் பேருந்து புறப்படக் கால தாமதமாயிற்று. இதற்கிடையில் பரமபுரி செல்லும் கடைசிப் பேருந்து ரத்னபுரியை விட்டுக் கிளம்பிப் போய்விட்டது. இரவு நேரம் வேதவல்லி செய்வதறியாது திகைத்து நின்றாள். ரத்னபுரியில் இரவு நேரத்தில் கயவர்கள் அட்டகாசம் அதிகம். வேறு வழி தோன்றாததால் வேதவல்லி காவல் நிலையத்தில் சென்று உதவி கோரினாள். அங்கிருந்த காவலர் அங்கேயே இரவு நேரத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஊருக்குக் கிளம்புமாறு யோசனை சொன்னார். அதைக் கேட்டு அப் பெண் காவல் நிலையத்திலேயே தங்கினாள். ஆனால் அன்று இரவு சில காவலர்கள் அவளைக் கற்பழித்தனர். அவமானம் தாங்காமல் அப்பெண் மறுநாள் காலை அவ்வூர் தெப்பக்குளத்தில் விழுந்து உயிர் நீத்தாள்”, என்று கூறி முடித்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா, இந்தப் பெண் உயிர் துறக்கக் காரணம் யார்? தகராறு செய்து பேருந்தைக் காலதாமதப் படுத்திய மாணவனா? பேருந்தை ஓட்டுவதை விட்டுக் கீழே இறங்கித் தாமதப் படுத்திய ஓட்டுநரா? அல்லது காவல் நிலையத்தில் அப் பெண்ணைக் கற்பழித்த காவலரா? விடை தெரிந்தும் நீ சொல்லாமலிருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும்” என்றது.

விக்கிரமாதித்தன், “வேதாளமே, இம்மூவரையும் விட அவ்வூர் அரசனே குற்றம் இழைத்தவன். மாணவர் – பேருந்துத் தொழிலாளர்கள் தகராறுகள் அடிக்கடி நிகழ்பவை. அவற்றில் தவறு யாரிடம் உள்ளது என்று உடனுக்குடன் கண்டறிந்து உரியவருக்குத் தண்டனை வழங்கி வந்தால் இத்தகைய தகராறுகள் ஏற்பட்டுப் பிறருக்கும் அதனால் இடைஞ்சல்கள் ஏற்படாது. அது போல் காவலர்கள் திக்கற்ற அப் பெண்ணுக்கு உரிய பாதுகாவல் அளிக்கக் கடமைப் பட்டவர்கள். அவர்கள் அதற்கு மாறாகவேலியே பயி்ரை மேய்ந்த கதையாய் அப் பெண்ணைக் கற்பழித்து உள்ளனர். வழக்கமாக இக் குற்றங்களைத் தன் அரசுக்குக் கெட்ட பெயர் வரக் கூடாது என்ற எண்ணத்தில் மறைத்துவிடுவதால் இக் குற்றத்தைச் செய்பவர்கள் துணிந்து விடுகின்றனர். அரசன் தன் கடமையிலிருந்து தவறுவதாலேயே இது போன்ற குற்றங்கள் நடை பெறுகின்றன” என்று விடை பகர்ந்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s