வேதாளம் சொன்ன கதை

“விக்ரமாதித்தா, நான் சொல்லப் போவது உன்னைப் போன்ற நீதி தவறாதஒரு நீதி அரசரின் மனித நேயப் பண்பாடு பற்றிய செய்தி” என்ற முன்னுரையுடன் வேதாளம் கதை சொல்லத் தொடங்கியது.

“வேதபுரி என்ற ஊரில் ஒரு செல்வந்தர். அவருடைய மனைவி இறந்ததும் தன் மன நிலை சரியில்லாத மகனை அன்புடன் வளர்த்து வந்தார். தன் காலம் முடிந்ததும் அவனை யார் கவனிப்பார்கள் என்ற எண்ணத்திலும், திருமணம் செய்து வைத்தால் அவனுக்குக் குணம் ஏற்படலாம் என்று பலர் சொல்லியதைக் கொண்டும் அவனுக்குத் தக்க வயதில் திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்தப் பெண் – அவள் பெயர் நீலி – தன் கணவனை உடனே மண முறிவு செய்துவிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு செல்வந்தர் தன் உற்ற நண்பனிடம் தன் மகனைப் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி இறந்துவிட்டார். நண்பர் அவ்விளைஞனை – அவன் பெயர் சுந்தர் – நல்லதொரு காப்பகத்தில் சேர்த்து வாராவாரம் அவனைச் சந்தித்துத் தேவையான உதவி செய்துவந்தார். இதனைக் கேள்வியுற்ற அவனது முன்னாள் மனைவி நீலி சில வழக்கறிஞர்களையும் அடியாள்களையும் துணைக்கு அழைத்துச் சென்று காப்பகத்திலிருந்து சுந்தரை வலுக் கட்டாயமாகக் கடத்திச் சென்றுவிட்டார். காப்பகத்தினர் உடன்தானே காவல் நிலையத்தில் புகார் செய்தபோது காவலர்கள் இப்புகாரைக் குற்றச் செயலாக FIR போடாமல் சமூக சேவைப் பதிவேட்டில் (CSR) பதிவு செய்தனர்.

சுந்தரைக் கடத்திச் சென்ற நீலி திருச்சபை (Church) மதகுரு (pastor) ஒருவரைப் பிடித்துத் திருமணமும் செய்து கொண்டார். கையோடு ஒரு பத்திரப் பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்ததுடன் சுந்தருக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை விற்றுவிட்டார்.

இதற்கிடையில் சுந்தரைக் காப்பகத்தில் காணச் சென்ற செல்வந்தரின் நண்பர் நடந்ததை அறிந்து பதறிப்போய் சுந்தரின் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி நீதி மன்ற உதவியை நாடினார். நேர்மையும் மனித நேயமும் நிறைந்த அந்த நீதியரசர் எத்தகைய சூழ்ச்சியும் மோசடியும் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து உடன்தானே வழக்கை ஏற்றுக் கொண்டதுடன் புகாரை உரிய முறையில் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாத காவலர் மீதும் உரிய கவனம் செலுத்தாமல் ஆவணங்களைப் பதிவு செய்த பதிவாளர் மீதும் விசாரணை மேற் கொள்ள ஆணையிட்டார்” என்று சொல்லி முடித்த வேதாளம், “மன்னா, புகாரை உரிய முறையில் பதிவு செய்யாத காவலர், பத்திரப் பதிவு செய்த அலுவலர், மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்தும் திருமணம் நடத்தி வைத்த மதகுரு ஆகியோரில் யார் செய்த பிழை மிகவும் மட்டமானது என்று உனக்குத் தெரிந்தும் நீ பதில் சொல்லாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறாக வெடிக்கும்” என்று சொல்லியது.

இப்போது கேள்வி உங்களுக்கு: விக்கிரமாதித்தன் என்ன பதில் கூறியிருப்பார்?

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s